உலகம்

9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்ற பெண்

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா என்ற பெண் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதெல்மா அதிகாலை 4.50 முதல் 4.59 மணிக்குள், அதாவது 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை பெற்றுள்ளார். அதில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன.

எனினும் இந்த அதிசயமான பிரசவம் 470 கோடி பிரசவத்தில் ஒருமுறை நிகழும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்த 6 குழந்தைகளும் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.