Breaking News

80 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது !

யாழ்.செய்தியாளர்

காரில் கஞ்சா கடத்தி சென்ற சமயம் காங்கேசன்துறை போக்குவரத்து பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

தெல்லிப்பழை சந்தியில் காரை சோதனை செய்தபொழுது ஒருவர் தப்பியோடியதுடன் காரில் இருந்த மற்றவரை விசாரணையின் பின் சோதனை செய்த பொழுது 80 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டது. அதன்போது கிளிநொச்சியை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.அவர் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.