விளையாட்டு

8 விக்கட்டுகளால் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெற்ற உலகக்கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.4 ஓவர்களில் 212 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

நிக்கலஸ் பூரன் 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

மார்க் வுட் மற்றும் ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

213 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடி இங்கிலாந்து அணி, 33.1 ஒவர்களில் 2 விக்கட்டுகளை மட்டும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.