உலகம்

72 மணித்தியாலங்களில் 14 குழந்தைகள் பலி

 

72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட இரண்டு வான்வழித் தாக்குதல்களில் லிபியாவில் 14 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக, லிபியாவின் ஐ.நா ஆதரவு அரச படையினர் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் திரிப்போலிக்கு தெற்கே ஒரு குடியிருப்பு பகுதியில் கிழக்கு நோக்கி கிளர்ச்சிப் படையினர் நடத்திய ஒரு வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதோடு, 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, நேற்று முன்தினம் உம் அல்-அரானிபில் நடந்த  மற்றொரு வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலீபா ஹப்தார் தலைமையிலான கிழக்கை தளமாகக் கொண்ட குழு, நகரத்தை கையகப்படுத்தவும், ஐ.நா ஆதரவு அரசாங்கத்தை கவிழ்க்கவும் கடந்த ஏப்ரல் ஆரம்பம் முதல் திரிப்போலியிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

ஆயுத மோதல்களளால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 120,000 பொதுமக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு மொஹமட் கடாபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் லிபியா பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் ஸ்தீரதன்மையற்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.