விளையாட்டு

இந்திய அணியை வெல்வது கடினம்- நசார் ஹூசைன்

இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய அணியை வலுவான அணியாக கட்டமைத்துள்ளார், அதனால் அவர்களை வெல்வது கடினம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நசார் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு செல்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையிலேயே நசார் ஹுசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.