இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவில் பலமான நிலையில் இங்கிலாந்து அணி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் சார்பில் அவ்வணியின் தலைவர் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 168 ஓட்டங்களையும் டென் லோரன்ஸ் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.