உலகம்

6000 பன்றிகளை கொல்லும் ஹொங்கொங் அதிகாரிகள்

ஹொங்கொங்கில் முதலாது பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றிய பன்றி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சீன எல்லையில் உள்ள சுவோங் சுயீ நகரில் உள்ள பன்றி பண்ணையில் குறித்த பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்குள்ள பன்றிகள் அனைத்தையும் கொல்வதற்கும், பண்ணையை முழுமையாக சுத்திகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பன்றிக்காய்ச்சல் ஏனைய பண்ணைகளுக்கும் பரவாதிருக்கும் பொருட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.