இலங்கை

45 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது அரசின் பட்ஜெட் !

ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் இன்று மாலை நிறைவேறியது.

ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ் முற்போக்கு முன்னணி ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன

கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஜே வி பி எதிராக வாக்களித்தன.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.