உலகம்

38 பேருடன் பயணித்த விமானத்தை காணவில்லை38 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் காணாமற்போயுள்ளதாக, சிலி நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் தெற்கு நகரமான புன்டா அரினாஸிலிருந்து அண்டார்டிகாவுக்கு செல்லும் வழியில் 17 பணியாளர்கள் மற்றும் 21 பயணிகளுடன் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஹெர்குல்ஸ் சி-130’ என்ற குறித்த விமானம், உள்ளுர் நேரப்பட்ட 4:55ற்கு புறப்பட்டதாகவும், எனினும் மாலை மாலை 6:13 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திற்கு என்ன ஆனது என்பது தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க முடியாமல் இருப்பதாக சிலி நாட்டின் விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதா? அல்லது கடத்தப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிலி நாட்டின் விமானப்படையின், ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.