விளையாட்டு

36 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை சாதனைஅவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில், 36 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான  அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் நான்காவது சுற்று ஆட்டத்தில் வெற்றிபெற்ற பெட்ரா கிவிட்டோவாவை, காலிறுதியில் சந்தித்த அவுஸ்திரேலிய வீராங்கனை, ஆஷ்லே பார்டி  வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மெல்பர்னில் நடந்த  காலிறுதியில் வெற்றிபெற்ற, பார்டி தனது சொந்த நாட்டு கிராண்ட்ஸ்லாம் போட்டியில்  36 வருடங்களின் பின்னர் அரையிறுதிக்கு வந்த முதல் அவுஸ்திரேலிய பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

காலிறுதியில் அவர், 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

பிரான்ஸ் பகிரங்க சாம்பியனான பார்டி  அரையிறுதியில், 14ஆம் நிலையில் உள்ள அமெரிக்க வீராங்கனையான சோபியா கெனினை எதிர்கொள்ளவுள்ளார்.

மெல்பர்னில் கடந்த 1984ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், அவுஸ்திரேலிய வீராங்கனையான வெண்டி டர்ன்புல் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.