Breaking News

35 வேட்பாளர்கள் களத்தில் – தேர்தல் சட்டங்கள் கடுமை என்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் !

 

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.தேர்தல் சட்டங்களை மீறுவோர் – தேர்தலில் அரச ஆதனங்களை பயன்படுத்துவோர் – அரசியலில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல ஆதரவாளர்கள் அநீதியாக அத்துமீறலில் ஈடுபட அரசியல்வாதிகள் அனுமதிக்கக் கூடாது.அத்துடன் அரசியல்வாதிகள் சட்டதிட்டங்களை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். ஊடகங்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். ஒருவரை ஊக்குவித்து ஒருவரை பாதிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படக் கூடாது.
சமூக ஊடகங்கள் ஊடாக தவறான பிரசாரம் அல்லது தவறான செய்திகளை செய்யாமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு சமூக ஊடகங்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.வாக்களிக்கும் விதம் வாக்களிப்பதை படமெடுத்து வெளிப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது . வாக்களிப்புக்கு 48 மணி நேரத்திற்க்கு முன்னர் நிசப்த காலம் என்பதால் அந்தக் காலப்பகுதிக்குள் எந்தவகையான பிரச்சாரங்களையும் செய்யமுடியாது.சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..”

– தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்தார்.