Breaking News

33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் – பட்டியல் மேலும் நீளுமாம் !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இதுவரை 33 பேர் செலுத்தியுள்ளனர்.

அரசியல் பிரமுகர்களான பியசிறி விஜேநாயக்க , ரஜீவ விஜேசிங்க , குமார் வெல்கம ,பஷீர் சேகுதாவூத் சமல் ராஜபக்ச உட்பட்டோரும் இதில் அடங்குகின்றனர்.

மேலும் பலர் நாளை கட்டுப்பணம் செலுத்தவுள்ளதால் இலங்கை வரலாறில் அதிகம் பேர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாக இது அமையவுள்ளதாக சொல்லப்படுகிறது.