உலகம்

24 தடவைகள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

 

நேபாளத்தைச் சேர்ந்த மலையேறியான கமி ரிட்டா சேர்பா என்ற 49 வயதானவர், 24வது தடவையாகவும் இமய மலைத்தொடரின் எவரெஸ்;ட் சிகரத்தை அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த 15ம் திகதி அவர் 23வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருந்தார்.

7 நாட்களின் பின்னர் மீண்டும் அதில் ஏறி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

தமக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் தொடர்ந்தும் எவரெஸ்ட்டில் ஏற விருப்பம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

1994ம் ஆண்டு அவர் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.