விளையாட்டு

21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரராக முரளி தெரிவு

21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

30 வீரர்களை உள்ளடக்கி விஸ்டன் பத்திரிகை வௌியிட்ட பட்டியலில் முத்தையா முரளிதரன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வீரர்கள் வௌிப்படுத்திய திறமைகளுக்கு அமைய 21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த காலப்பகுதியில் முரளி 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாஇ 573 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதாக விஸ்டன் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில் 151 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 584 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இந்த காலப்பகுதியில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முரளி 800 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.