உலகம்

21ஆவது ஆண்டில் கூகுள்கூகுள் தனது 21 வது பிறந்த நாளை இன்று, ஒரு  சிறப்பு டூடுலுடன் கொண்டாடுகின்றது.

கூகுள் தேடுபொறியானது, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களான, செர்ஜி பிரின் மற்றும் லோரன்ஸ் பேஜ் ஆகியோரால் 21 வருடங்களுக்கு முன்னர், இதேபோன்று ஒருநாளில் உருவாக்கப்பட்டது.

கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் உள்ள தமது விடுதியில், லோரன்ஸ் மற்றும் செர்ஜி ஆகியோர் கூகுளைக் கண்டுபிடித்தனர்.

இருவரும் ஒரு பெரிய அளவிலான தேடுபொறியின் முன்மாதிரிப் பற்றி ஒரு காகிதத்தை வெளியிட்டனர்.

கூகுள் உருவாவதற்கு முன்னர் இருவரும், “பேக்ரப்”  என்ற தேடல் வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

கூகுள் என்ற சொல் ‘கூகொல்’ என்ற சொல்லில் இருந்து உருவாக்கப்பட்டதோடு, இதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூச்சியத்தை போடுவதால், வரும் எண்ணைக் குறிப்பதாகும்.

எவ்வளவு தரவுகளை தாங்கள் தேட விரும்புகிறோம் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த பெயரை அவர்கள் வைத்துள்ளார்கள்.

கூகுளின் தலைமை அலுவலகம் கூகுள்ப்ளெக்ஸ் என அழைக்கப்படும். இது கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகன் வேலியில் அமைந்துள்ளது.

2005ஆம் ஆண்டுவரை, கூகுள் தனது பிறந்த நாளை செப்டெம்பர் 7ஆம் திகதி கொண்டாடியது.  எனினும் அதன் பின்னர், செப்டெம்பர் 8, செப்டம்பர் 26  என திகதிகளை கூகுள் மாற்றியது.

தற்போது செப்டெம்பர் 27 தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது கூகுள்

கூகுள், உலகம் முழுவதும் 100ற்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்குவதோடு, ஒவ்வொரு வருடமும், ட்ரில்லியன் கணக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது கூகுள்.

கூகுள், உலகம் முழுவதும் மற்றும் 100ற்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்குவதோடு, ஒவ்வொரு வருடமும், டிரில்லியன் கணக்கான கேள்விகளுக்கு பதிலளிக்கின்றது கூகுள்.