விளையாட்டு

2026 பனிக்கால ஒலிம்பிக் இத்தாலியில்

2026ம் ஆண்டின் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளும், பராலிம்பிக்ஸ் போட்டிகளும் இத்தாலியில் நடைபெறவுள்ளன.

இத்தாலியின் மிலன் மற்றும் கோர்டினா நகரங்களில் இந்த போட்டிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் நடந்த வாக்கெடுப்பில் இத்தாலி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பெப்ரவரி மாதம் 6ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

பராலிம்பிக்ஸ் போட்டிகள் மார்ச் மாதம் 6ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இடம்பெறும்.