இலங்கை

2018 இல் மைத்ரி 3 தடவைகள் அரசியலமைப்பை மீறினார் – நாங்களே பாதுகாத்தோம் – சுமந்திரன் பதிலடி !

“ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த வருடம் மூன்று தடவைகள் அரசியலமைப்பை மீறியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரான நாங்களே அரசியலமைப்பை பாதுகாத்தோம் என்பதை அவர் நினைவு கொள்ளவேண்டும் .வெளிநாட்டு நீதிபதிகள் வருகையானது இலங்கையின் இறையாண்மையை பாதிக்காது. அது அரசியலமைப்பை மீறுவதாகவும் அமையாது.22 மார்ச் 2019 எனது பாராளுமன்ற உரையில் அதனை தெளிவாக கூறியுள்ளேன்..”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம் பி தெரிவிப்பு..

அரசியலமைப்பை மீறும் ஜெனீவா தீர்மானத்தை அனுமதிக்கப் போவதில்லையென்ற ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலடி !