விளையாட்டு

201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை

 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

குசல் ஜனித் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றார்.

மொஹமட் நபீ 30 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 41 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் வெல்வதற்கு டக்வர்த் லூவிஸ் முறையின் படி 41 ஓவர்களில் 187 ஓட்டங்களைப்பெற வேண்டும்.