விளையாட்டு

20/20 தொடரையே சுவீகரித்தது தென்னாபிரிக்கா

இலங்கை தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கிடையில் ஜொஹன்னேஸ்பேர்க்கில்  நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான 20/20 போட்டியிலும் தென்னாபிரிக்க அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது .

இதன்மூலம் 20/20 தொடரின் 3-0 என்ற ரீதியில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களை பெற்றது. மழை காரணமாக இலங்கை அணி 17 ஓவரில் 183 ஓட்டங்கள் பெற இலக்கு வழங்கப்பட்டது.

ஆனால் 15.4 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே பெற்றது இலங்கை .