Breaking News

190 பயணிகளுடன் கேரளாவில் தரையிறங்கிய விமானம் விபத்து: 11 ​பேர் உயிரிழப்பு

டுபாயில் இருந்து வந்த எயார் இந்தியா விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடு தளத்தில் தரையிரங்கும் போது, பாதையில் இருந்து விலகி விபத்துகுள்ளாகியுள்ளது.

கனமழை பெய்ததால் ஓடுபதையில் இருந்து விமானம் சறுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துகுள்ளான விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 பைலட்டுகள் மற்றும் 5 விமானக் குழுவினர் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் விமானி உள்ளிட்ட 11பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக டுபாயில் சிக்கித் தவித்தவர்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இந்த விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர்.