விளையாட்டு

19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் நடால்


அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் சம்பியனாகியுள்ளார்.

இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெட்வடேவ்ஸை, சந்தித்த நடால், 7-5 6-3 5-7 4-6 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று தனது 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.

மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப்போட்டியில், முதல் இரண்டு செட்களையும் நடால் கைப்பற்றியபோதிலும், அடுத்த இரண்டு செட்களையும், மெட்வடேவ்ஸ் கைப்பற்றினார், எனினும் இறுதி சுற்றை நடால் கைப்பற்றினார்.

நான்கு மணித்தியாலங்களும், 50 நிமிடங்களும் இடம்பெற்ற இந்த விறுவிறுப்பபான ஆட்டம், மிக நீண்ட அமெரிக்க பகிரங்கத் தொடரின் இறுதிப் போட்டியை விட நான்கு நிமிடங்கள் முன்னதாகவே நிறைவடைந்தது.