Breaking News

18 – 19 ஆம் அரசியலமைப்பு திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் – மைத்ரி அதிரடி

 

அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆம் திருத்தங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில்- பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் நிகழ்வில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமரையும் முன்னால் வைத்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது ,

பிரதமர் அவர்களே எமது அரசுக்கு நான்கரை வருட காலம் முடிந்து இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. நான்கரை வருடங்களில் நாம் நன்றாக நடந்தோமா நம்மால் தவறவிடப்பட்ட இடங்கள் என்ன என்பதை நாம் தேடிப்பார்க்க வேண்டும் .இந்த நான்கரை வருடங்களில் நாம் செயற்பட முடியாமைக்கு பிரதான காரணமாக எதுவும் இருக்குமானால் அது 19 வது திருத்தம் தான்.19 ஆவது திருத்தம் வந்திராவிடில் இது ஒரு சிறந்த அரசாக இருக்கும்.நானும் பிரதமரும் இரண்டு பக்கங்களுக்கு இழுப்பதாக மக்கள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.அந்த நிலைமை 19 வது திருத்தத்தினால் தான் ஏற்பட்டது.18 வது திருத்தம் மஹிந்த கொண்டுவந்தார்.அது கட்டளையிடும் வகையிலான ஒரு திருத்தம்.எனவே நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தனிநபர்கள் தொடர்பான பிரச்சினை அல்ல இங்கு அரசியலமைப்பு பிரச்சினையே உள்ளது.அரசியலமைப்பின் 18 மற்றும் 19 ஆவது திருத்தம் ரத்துச் செய்யப்பட்டு இல்லாமலாக்கப்பட்டால் நாட்டின் மக்கள் நல்லதொரு ஆட்சியை எதிர்பார்க்க முடியும் –

என்றார் ஜனாதிபதி