உலகம்

18 இந்தியர்களுடன் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பலை சிறைபிடித்தது ஈரான்

 

கப்பலின் கெப்டன் மற்றும் 18 இந்தியர்கள் உட்பட 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த பிரிட்டனின் எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறைபிடித்துள்ளது.

ஹோர்முஸ் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கப்பலை ஈரான் சிறைபிடித்திருப்பதால் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

கப்பலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து தெஹ்ரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு விவகாரத்துறை அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

இந்த கப்பல் பிரிட்டிஷ் கொடியுடன் காணப்படுகிறது. இதன் கெப்டன் ஒரு இந்தியர். இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லத்வியா உள்ளிட்ட நாட்டினரும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.