விளையாட்டு

16 வயதில் சாதனை படைக்கவில்லை – உண்மையை வெளிப்படுத்தினார் அப்ரிடி !

 

1996-ல், 37 பந்துகளில் சதமடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார் என்று முன்னர் வெளிவந்த தகவல்களில் உண்மையில்லை என தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்படுத்தியுள்ளார் பாகிஸ்தான் சஹிட் அப்ரிடி .

அப்ரிடி. கேம்சேஞ்சர் என்கிற நூல் இந்த பாகிஸ்தானில் வெளியாகியுள்ளது.

அந்த நூலில், 1975-ன் நான் பிறந்தேன். 1996 அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தேர்வாகினேன். நிர்வாகிகள் சொன்னது போல எனக்கு 16 வயது அல்ல, 19 வயது. என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார். இதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

2016 ரி 20 உலகக் கிண்ணத்துடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அப்ரிடி. அப்போது 36 வயதில் அவர் ஓய்வு பெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் 40 அல்லது 41 வயதிலேயே ஓய்வு பெற்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.