இலங்கை

135 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் (14) நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தமது முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பாக தினேஸ் சந்திமால் 28 ஓட்டங்களையும் எஞ்சலோ மெத்யூஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் டொம் பெஸ் 5 விக்கெட்டுக்களையும் ஸ்டுவர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.