Breaking News

11 – 12 விடுமுறை கிடையாது !

எதிர்வரும் 11, 12 மற்றும் 15 ஆம் திகதிகளை அரச விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் விடுத்த வேண்டுகோளை நேற்று நிராகரித்தது அமைச்சரவை.

பெருநாள் தினங்கள் விடுமுறை நாட்களில் வருவதால் இப்படி அரச விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் வேண்டுகோள் விடுத்தாலும் இப்படியான விடுமுறைகளை வழங்கினால் நாட்டை எப்படி கொண்டுநடத்துவதென ஜனாதிபதி கேட்டுள்ளார்.

அதுபோல் அமைச்சர்களான ராஜித – சம்பிக்க உட்பட்ட அமைச்சர்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்தே 15 ஆம் திகதியை மட்டும் பொதுவிடுமுறை தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்தது.