Breaking News

11 முறைப்பாடுகள் பதிவு – இன்று இறுதிநாள்

 

றிசாத், அசாத் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இதுவரையில் 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவர்களது முறைப்பாடுகளை திரட்டுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

றிசாத்துக்கு எதிராக 7 முறைப்பாடுகளும், ஹிஸ்புல்லாவிற்கு எதிராக 1 முறைப்பாடும் பதிவாகியுள்ளன.

முறைப்பாடுகளை பதிவு செய்யும் இறுதி தினம் இன்று என்பதோடு, இந்த முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.