Breaking News

ஹொஸ்னி முபாரக் காலமானார் !

 

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியான ஹொஸ்னி முபாரக் தனது 91 வது வயதில் காலமானார். 2011 ஆண்டில் நடந்த புரட்சியின் பின்னர் அவர் பதவி விலகினார்.

முபாரக் 1981 ஆம் ஆண்டு முதல் எகிப்தின் நான்காவது ஜனாதிபதியாக பணியாற்றினார்.அரபு வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்றும் அவரது இரண்டு மகன்மார் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மகன்மார் இருவரும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்படவே, கெய்ரோவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முபாரக், நோய்வாய்ப்பட்டநிலையில் மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரித்து கெய்ரோ இராணுவ நீதிமன்றம் ஹொஸ்னி முபாரக்கின் உடல்நிலை என்பவற்றை கருத்திற்கொண்டு, அவரை 2017 ஆம் ஆண்டு விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.