உலகம்

ஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா?

ஹொங்கொங் – யுவான் லாங்கில் ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையம் ஒன்று முகமூடி அணிந்த ஆண்கள் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளது.

 

வெள்ளை நிற ஆடை அணிந்த அவர்கள், ரயில் நிலையத்தில் இருந்த மக்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் குறைந்த பட்சம் 45 பேர் காயமடைந்தனர்.

ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

சமீபத்திய ஜனநாயக சார்பு பேரணியைத் தொடர்ந்து, இந்த கும்பல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் அவர்கள் பயணிகளையும், போராட்டத்திலிருந்து திரும்பிச் செல்லும் மக்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கலகத் தடுப்பு போலிசார் மக்கள் பேரணிகள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை கொண்டு தாக்கியுள்ளனர்.