உலகம்

ஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தையும் போர்க்களமாக மாற்றிய போராட்டம்

ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள்அந்நாட்டின் பல்தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தையும் போர்க்களமாக மாற்றியுள்ளது.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த சிலதினங்களாக முற்றுகையிட்டு இருந்த போராட்டக்காரர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார் வளாகத்துக்குள்  நுழைய முனைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோட முனைந்தவர்கள் மீது  தாக்குதல் நடத்திய பொலிஸார் பலரை கைது செய்துள்ளது.

பல்தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்துக்குள் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை கைது செய்வதற்காக நேற்று பல தடைகளைத் தாண்டி ஹொங்கொங் காவற்துறையினர் சென்றதையடுத்து நிலைமை மோசமானது.

முன்னதாக நேற்றிரவு வன்முறைகள் இடம்பெற்றிருந்த நிலையில்  இன்று அதிகாலைக்கு முதல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிக்க முயன்றபோது அவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளபட்டது.

வளாகத்துக்குள் இன்னும் நூற்றுக்கணக்கானோர் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில் இதுவரை பலர் கைதுசெய்யப்பட்டனர்.