உலகம்

ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்குள் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்குள் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தை பொலிஸார்  சுற்றி வளைத்துள்ளனர்.

எதிர்ப்பாளர்கள் இன்று காலை வெளியேற முயன்றனர், எனினும் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை எரிந்து அதனை தடுத்துள்ளனர்.

முகமூடி அணிந்த கலவரக்காரர்களை உள்ளடக்கிய பெரிய குழு  ஒன்று, திடீரென பொலிஸாரின் தடையை மீறி செல்ல முயன்றதால், கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக, பல்கலைக்கழகத்தில்  நுழைய பொலிஸார் முயன்றபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பல்கலைக்கழகத்திற்குள் குறைந்தது 500 பேர்  தங்கியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹொங்கொங்கின் வன்முறைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நாட்களாக அந்த இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்.

எதிர்ப்பாளர்கள் சியோங் வான் வீதியின் தெற்கு பாலம் வழியாக வளாகத்தை விட்டு வெளியேறலாம் என்று பொலிஸார் அறிவித்தனர், எனினும் பொலிஸார் ஆயுதங்களை கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதற்கிடையில்இ ஒரு ஹொங்கொங் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு எதிரான முகமூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது என தீர்ப்பளித்துள்ளது.