உலகம்

ஹொங்கொங் சீனாவின ஒரு பகுதியே; சீனா மீண்டும் வலியுறுத்தியது 

 

ஹொங்கொங் சீனாவின் ஆளுகைக்கு உட்பட ஒரு பகுதியென்பதில் மாற்றுக் கருத்தில்லை என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் அதிக வாக்களிப்பு வீதத்துடன் நேற்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தலில் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி இயக்கம் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

ஹொங்காங்கில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற ஜனநாயக மீட்புப் போராட்டங்களை மக்கள் ஆதரிக்கின்றார்களா இல்லையா என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள் அதற்குரிய தீர்வினை வழங்கியுள்ளன.

2015இல் நடந்த தேர்தலில் 47 சதவீத வாக்குகள் மாத்திரமே பதிவாகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் அது 71 சதவீதத்தும் அதிகமாக மாறியிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று வெளியான வெளியான தேர்தல் முடிவுகளில் சீனஅரசுக்கு ஆதரவான பிரதிநிதிகள் தோல்வியைத்த ழுவியுள்ள அதேவேளை ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் இடம்பெற்ற 18 மாவட்ட சபைகளில் 17 சபைகளை ஜனநாயக ஆதரவுத் தரப்பு கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேயுடனான சந்திப்பின் பின்னர் ஹொங்கொங் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட சீனவெளிவிவகார அமைச்சர் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருந்தாலும், ஹொங்கொங் சீனாவின் ஒரு பகுதி என்ற விடயத்தில் மாற்றுக் கருத்தில்லை எனக் குறிப்பிட்டார்.

ஆகவே, ஹொங்கொங்கின் உறுதித்தன்மையை குலைக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய பெரும்பாலான இடங்களை ஜனநாயக ஆதரவு இயக்கம் கைப்பற்றியுள்ளது.

கடந்த 5 மாதங்களாக ஹொங்கொங்கில் நிலவிவரும் அமைதியின்மை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் சாராம்சமாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.