உலகம்

ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

ஹொங்கொங்கில், ஆர்ப்பாட்டத்தின்போது , பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 18 வயது ஆர்ப்பாட்டக்காரர் சிகிச்சை பெற்று வரும், வைத்தியசாலை வளாகத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கறுப்பு நிற ஆடை அல்லது பாடசாலை சீருடைய அணிந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாங் சி-கின் என்ற குறித்த இளைஞரின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் 70 ஆண்டுகால ஆட்சியைக் கொண்டாடுகின்ற நிலையில், நான்கு மாத ஆர்ப்பாட்டங்களில் முதல் முறையாக ஒரு ஆர்ப்பாட்டக்காரர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் நகரத்தின் பல பகுதிகளிலும் பல மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பொலிசார் கண்ணீர்ப்புகை, இறப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் செய்துள்ளனர்.