உலகம்

ஹொங்கொங்கில் மீண்டும் போராட்டம்

 

ஹொங்கொங்கில் மீண்டும் இன்று மக்கள் போராட்டம் நடத்தப்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங் தலைவர் கரி லாம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் சுமார் 240,000 பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைதிகளை சீனாவுக்கு நாடுகடுத்துவதற்கு வழிவகுக்கும் சட்டமூலம் ஒன்றை கொண்டுவர முயற்சித்தமைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, அந்த சட்டமூலம் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.