உலகம்

ஹொங்கொங்கில் தொடரும் பெரும் போராட்டங்கள்

 

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தற்போது அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக செல்கின்றனர்.

சர்ச்சைக்குரிய கைதி பறிமாற்ற சட்டமூலத்துக்கு எதிராக கடந்த தினங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தற்போது பல்வேறு ஜனநாயக ரீதியான உரிமைகளை மையப்படுத்தி போராட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் போராட்டம் நடத்தும் மக்களிடம் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டிருந்தநிலையில், பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

பொலிசார் வன்முறைகளை தடுப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.