இலங்கை

ஹெட்டிபொலவில் வீடுகள் எரிப்பு – மக்கள் வயல்களில் தஞ்சம் !

 

ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு அந்தப்பகுதியில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது.

அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

நோன்புக் காலம் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேலும் சொல்லப்பட்டது.

 

தும்மலசூரியவில் படைகள் இறக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது