உலகம்

ஹுவவேயிற்கு கூகுள் கட்டுப்பாடு

சீனாவின் ஹுவவேய் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு கூகுள் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இந்த நிறுவனம் உள்ளிட்ட பல வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் உற்பத்திகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தடை விதித்தார்.
குறித்த நிறுவனங்கள் உரிய தரச்சான்றிதழைப் பெற்றால் மாத்திரமே அவற்றின் உற்பத்திகளை பயன்படுத்த முடியும்.
இந்த தடையின் அடிப்படையில், கூகுள் நிறுவனம் தமது அண்ட்ரொயிட் ஒப்பரேட்டிங் சிஸ்ட்டத்தின் புதிய அப்டேட்களை பெற முடியாதபடி ஹுவவேய் நிறுவனத்தின் கருவிகளை தடுத்துள்ளது.
அத்துடன் கூகுளின் முக்கியமான எப்களையும் ஹுவவே கருவிகளால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.