மாகாணச் செய்திகள்

ஹில்ஸ்ட்ரீம் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

 

-பிரஜித் ஸ்ரீ – இரத்தினபுரி நிருபர்-

ஹொரண பிளான்டேசன் கம்பனிக்கு சொந்தமான ஹில்ஸ்ட்ரிம் தோட்டத்தில் நான்கு பிரிவுகளையும் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 10ஆம் திகதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களிடம் தோட்ட நிர்வாகம் வேலையை வாங்கிவிட்டு தொழிலாளிகளுக்கு அரை நாள் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றும் மேலதிக வேலையை வாங்கிவிட்டு அதற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றும் மற்றும் ஹில்ஸ்ட்ரிம் தோட்ட காரியாலயம் மூடப்பட உள்ளது குறித்தும் ஹில்ஸ்ரிம் தோட்ட காரியாலயத்தில் கடமை புரியும் தலைமை நிர்வாக அதிகாரியை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும், இம்மாத சம்பளத்தையும் பெறாமல் கடந்த 10ஆம் திகதி முதல் தொழிலாளர்கள் தோட்ட காரியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடந்தி வருகின்றனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி தோட்ட அதிகாரி மற்றும் உதவி அதிகாரி இடமாற்றம் செய்யும் வரையும் மற்றும் ஹில்ஸ்ரிம் தோட்ட காரியாலயத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் இடமாற்றத்தை ரத்து செய்யும் வரையும் தாம் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.