விளையாட்டு

ஹாட்ரிக் மெஸ்ஸி

 

ஸ்பெயின் லாலிகா கால்பந்து போட்டியில் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பார்சிலோனா. அதன் கெப்டன் மெஸ்ஸி 51-ஆவது ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்தார்.
லாலிகா பட்டியலில் ஏற்கெனவே முதலிடத்தில் உள்ள பார்சிலோனா இந்த வெற்றி மூலம் அதெலெட்டிக்கோ மாட்ரிட் அணியை விட 10 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளது. இது மெஸ்ஸி இந்த சீசனில் அடித்த 4-ஆவது ஹாட்ரிக் கோலாகும்.

லிவர்பூல் முதலிடம்

இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி முதலிடம் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு கிரேவன் காட்டேஜ் மைதானத்தில் புல்ஹாமுடன் நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது லிவர்பூல். இந்த வெற்றி மூலம் ப்ரீமியர் லீகில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி 2-ஆவது இடத்தில் உள்ளது.