விளையாட்டு

ஹர்பஜன் சிங்கின் சாதனை

ஐ.பி.எல். தொடர்களில் மொத்தமாக 150 விக்கட்டுகளுக்கு மேல் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்பஜன் சிங் படைத்துள்ளார்.
டெல்லி கெப்பிட்டஸுக்கு எதிராக இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் அவர் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்த சாதனையை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் டெல்லி கெப்பிட்டல்ஸின் அமித் மிஷ்ரா 157 விக்கட்டுகளையும், கொல்கட்டா நைட் ரைடர்ஸின் பியுஸ் சௌலா 150 விக்கட்டுகளையும் ஐ.பி.எல் தொடர்களில் வீழ்த்தி இருக்கின்றனர்.