விளையாட்டு

ஹரின் ஃபெர்ணாண்டோவிற்கு லஞ்சம் கொடுக்க முனைந்த சனத் – ஐ.சீ.சி. குற்றச்சாட்டு

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவிற்கு லஞ்சம் கொடுக்க முனைந்ததாக, சிறிலங்கா கிரிக்கட்டின் பகுத்தாய்னர் சனத் ஜெயசுந்தர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் போட்டி ஒன்றுக்காக அவர் இந்த லஞ்சத்தை வழங்க முயற்சித்துள்ளார்.
இதுதொடர்பில் ஹரின் பெர்ணாண்டோ சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை ஐ.சி.சி அறிவிப்பு செய்துள்ளது.
மேலும் அவர் ஊழல் எதிர்ப்பு விசாரணைக்கான ஆவணங்களை வழங்க தாமதித்தாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.