Breaking News

ஹட்டன் விபத்தில் இருவர் படுகாயம் !

ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

ஹட்டன் பொலிஸ் பிரிவு டிக்கோயா தரவளை பகுதியிலே லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு இந்த விபத்து மாலை 7.45 மணியளவில் நடந்தது.

ஹட்டனிலிருந்து படல்கல நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளும் படல்கல பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறியுமே நேருக்கு நேர் மோதுண்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

( நோர்ட்டன் பிரிட்ஜ் செய்தியாளர் )