Breaking News

ஹட்டன் – எரோல் தோட்டத் தொழிலாளர் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு

 

வேண்டிய கொடுப்பனவு பணத்தினை தோட்டநிர்வாகம் வழங்க மறுத்தமைக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் கடந்த முன்று நாட்களாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

குறித்த தோட்ட தோட்டபகுதியில் உள்ள பழமைவாயந்த 31 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல ஏனைய தோட்டப் பகுதிகiளில் வெட்டி விற்பனைை செய்யப்படுகின்ற மரங்களுக்கு தோட்ட தொழிலாளர்களுக்கும் ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது, ஆகவே எரோல் தோட்டபகுதியில் மாத்திரம் தோட்டநிர்வாகம் பெரும் இலாபத்தை தொழிலாளர்களுக்கு வழங்க மறுப்பு தெரிவித்துவருவதாக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்

மரங்களை வெட்டி இலாபத்தை பெரும் தோட்ட நிர்வாகம் எங்களுக்கு வழங்கப்பட
வேண்டிய இலாபத்தினை வழங்கும் வரை தாம் தொழிலுக்கு செல்லபோவதில்லையென
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(படங்களும் செய்தியும் -நோட்டன்பிரிஜ் செய்தியாளர் எம்.கிருஸ்ணா)