Breaking News

ஹட்டனில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் !

 

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் ஓல்டன் பிரதான வீதியின் நோர்வுட்
மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகிய காரொன்று 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த சம்பவம்
நேற்று இரவு பத்து மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டனில் இருந்து மஸ்கெலியா சாமிமலை பகுதியை நோக்கி பயணித்த இந்த காரில் சென்ற எவருக்கும் பாதிப்பில்லையென பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

பொகவந்தலாவ நிருபர் –