இலங்கை

ஹட்டனில் திடீர் சுகவீனமுற்ற மாணவர்கள் 08 பேர் வைத்தியசாலையில் அனுமதி

திடீர் காய்ச்சல் மற்றும் சுவாசிக்க முடியாமல் அவதியுற்ற 08 மாணவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா
வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் 08 மாணவர்களே இவ்வாறு பொகவந்தலாவ
பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பாடசாலையில் மாணவர்கள் கற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது
தரம் 10 ஐ சேர்ந்த மாணவர்கள் 08 பேர் திடீர் காய்ச்சல் மற்றும்
சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறலினால் பாாதிப்படைந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதித்த மாணவர்களுள் 07 பெண்களும் ஒரு ஆணும்
உள்ளடங்கவதாகவும் குறித்த மாணவர்கள் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எஸ்கே. ஜயசூரிய தெரிவித்தார்

இதேவேளை குறித்த எட்டு மாணவர்களும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருவதோடு சம்பவம் தொடர்பில் பாடசாலைக்கு சென்ற பொகவந்தலாவ பொதுச்சுகாதார பரிசோதகர் கணேசன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.

– நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-