உலகம்

ஹங்கேரி படகு விபத்தில் 7 பேர் பலியாகினர்

ஹங்கேரியின் தலைநகர் புதபெஸ்ட்டில் இடம்பெற்ற படகு விபத்தில் குறைந்த பட்சம் 7 பேர் பலியாகியதுடன், 19 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.
அங்குள்ள டனியுப் ஆற்றில் இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது.
படகு விபத்துக்கு உள்ளாகும் போது அதில் 30 பேர் வரையில் பயணித்தனர்.
அவர்களில் அதிகமானவர்கள் தென்கொரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளாவர்.
அதிக மழையின் காரணமாக ஆற்றின் நீர்மட்டம் உயிர்ந்திருந்த படியால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது