விளையாட்டு

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன்: சாய்னா, சமீர் வர்மா பங்கேற்பு

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெறவுள்ள ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பில் சாய்னா நெவால், சமீர்வர்மா உள்பட பல்வேறு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த வாரம் பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்து இந்திய நட்சத்திரங்கள் அனைவரும் வெளியேறினர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள ஸ்விஸ் ஓபன் போட்டியில் நடப்பு சாம்பியன் சமீர் வர்மா, 2 முறை சாம்பியன் சாய்னா நெவால் கலந்து கொள்கின்றனர். மேலும் சாய் பிரணீத், உள்ளிட்டோரும் ஆடவர் தரப்பில் கலந்து கொள்கின்றனர்.
மகளிர் பிரிவில் வைஷ்ணவி ஜக்கா ரெட்டி, மட்டுமே ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார். இரட்டையர் பிரிவில் அர்ஜுன் எம்ஆர்-ராமச்சந்திரன் ஷிலோக், மனு அட்ரி-சுமீத் ரெட்டி, மகளிர் தரப்பில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, பூஜா தண்டா-சஞ்சனா சந்தோஷ், கலப்பு இரட்டையரில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா=சிக்கி ரெட்டி பங்கேற்கின்றனர்.