விளையாட்டு

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு விசேட ஆலோசனை சபை

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசேட ஆலோசனை சபை ஒன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இணைக்கப்படுவார்கள்.

உலக கிண்ண தொடரின் தோல்வியை அடுத்து இலங்கை அணியின் பயிற்சியாளர்கள் அனைவரையும் பதவி விலக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அணித் தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக புதிய ஆலோசனை சபை உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.