இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லைக்காவுக்கு – சபையில் மஹிந்தானந்த தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை லைக்கா மொபைல் நிறுவனத்திற்கு விற்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட இறுதிநாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது இந்த அரசின் இறுதி பட்ஜெட் என்றும் குறிப்பிட்டார்.

“ முடிந்தால் தேர்தல் ஒன்றை வையுங்கள். நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவோம். நாங்கள் ஒழுங்கான முறையில் வழங்கிய பொருளாதாரத்தை இந்த அரசு சீரழித்து விட்டது.” என்றும் குறிப்பிட்டார் மஹிந்தானந்த