விளையாட்டு

ஸ்மித் முதலிடத்தில்; திமுத் ஏழாம் இடத்தில்

 

சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 928 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியா – பாகிஸ்தான்இ நியூசிலாந்து – இங்கிலாந்து, மற்றும் இந்திய – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர்களை அடிப்படையாக கொண்டு புதிய டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

நியுசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன இந்தப் பட்டியலில் 723 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

முதல் 10 இடங்கள்;

Steve Smith – 931
Virat Kohli – 928
Kane Williamson – 877
Cheteshwar Pujara – 791
Ajinkya Rahane – 759
Henry Nicholls -744
Dimuth Karunaratne – 723
Tom Latham – 707
Ben Stokes – 704
Mayank Agarwal – 700